இந்தியர்களை செல்வந்தர்களாக்கும் தங்கம் – இந்தியாவில் 62 சதவீத குடும்பங்களை லட்சாதிபதிகளாக மாற்றிய 'தங்கம்'
Gold makes Indians rich Gold has made 62 percent of families in India millionaires
‘மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் விணாகாது’ என்பார்கள். அதைப் போலவே, தங்கத்தின் மதிப்பு காலப்போக்கில் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இப்போது அந்த பழமொழி நிஜமாகி வருகிறது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் 890 டன் தங்கம் கையிருப்பாக உள்ளது.உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, இந்திய குடும்பங்களின் வீடுகளில் சுமார் 25,000 டன் தங்கம் சேமிக்கப்பட்டுள்ளது.இன்றைய கணக்கில், அந்த தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.190 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.உலகிலேயே மக்கள் அதிக அளவில் தங்கம் வைத்திருக்கும் நாடு இந்தியாதான்.
2016 ஆம் ஆண்டு ICE-360 அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 87% வீடுகளில் தங்கம் இருந்தது.அந்த காலத்தில் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு வீட்டில் இருந்த 10 கிராம் தங்கத்திற்கு ரூ.28,560 மட்டுமே.இன்று அதே 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.1,07,700 ஆக உயர்ந்துள்ளது.
உலக தங்க கவுன்சிலின் 2021 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள குடும்பங்களில் 62% தொடக்க நிலை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இந்த குடும்பங்களில் குறைந்தது ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் இருந்தாலும், இன்று அவர்கள் லட்சாதிபதிகள் ஆகிவிட்டனர்.
முந்தைய காலத்தில் 125 பவுன் (1,000 கிராம்) தங்கம் வைத்திருந்த லட்சாதிபதி குடும்பங்கள், இன்று கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர்.
ஏழை குடும்பங்களிலும் காதணி, தோடு போன்ற சிறிய அளவு தங்க நகைகள் இருந்தாலும், அதன் மதிப்பு இன்று அவர்களுக்கு நம்பிக்கையும் வருமானமும் அளித்துள்ளது.தங்க விலை உயர்வு ஏழைகளை லட்சாதிபதிகளாகவும், லட்சாதிபதிகளை கோடீஸ்வரர்களாகவும் மாற்றியுள்ளது.
தங்கம் வெறும் உலோகம் மட்டுமல்ல, அது இந்திய குடும்பங்களின் மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை.
திருமணம், விழா, சிறப்பு நிகழ்வுகளில் தங்கம் இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது.எனவே தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், அதன் தேவை குறையாது என்பது நிபுணர்களின் கருத்து.
தங்கம், இந்தியர்களுக்கு வெறும் நகையாக இல்லாமல், செல்வமும், பாதுகாப்பும், பெருமையும் தரும் காலமற்ற சொத்தாகத் திகழ்கிறது.
English Summary
Gold makes Indians rich Gold has made 62 percent of families in India millionaires