'மஞ்சள் நிற ஜெர்சியை அணிவது புத்துணர்ச்சியாகவும், ஒரு சாம்பியனை போலவும் உணர்ந்தேன்'; சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி: வீடியோ உள்ளே..!
Sanju Samson said he felt like a champion when he wore the csk yellow jersey
2026 ஆம் ஆண்டுக்கான 19-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி நடக்கவுள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுடைய டிரேடிங் விவரம் மற்றும் தக்கவைப்பு வீரர்கள் விவரங்களை கடந்த 15-ஆம் தேதி அறிவித்தனர்.
அதில் சமூக வலைத்தளங்களில் ஜடேஜா குறித்து வெளியான செய்திகள் வெறும் வாந்தியாகும் என எதிர்பார்த்து இருந்த சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டது தான். 12 ஆண்டுகளாக சென்னை அணியின் ஒரு அங்கமாக இருந்தவர் 'தளபதி' ரவீந்திர ஜடேஜா. அவருடன் சுட்டி குழந்தை என செல்லமாக அழைக்கப்பட்ட சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்துவிட்டு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை அணிக்கும் கொண்டு வந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அத்துடன், டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், மதீச பதிரன, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, ஜம்மி ஒவ்ர்டன், ஷேக் ரசித்,கமலேஷ் நாகர்கோட்டி, வன்ச் பேடி , அன்றே சித்தார்த், முகேஷ் சவுத்ரி, ஷிரேயஸ் கோபால் போன்ற வீரர்களும் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா அணியிலிருந்து வெளியேறியது வருத்தமாக இருந்தாலும், புதிய வரவாக வந்திருக்கும் சேட்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், சஞ்சு சாம்சனும் சிஎஸ்கேவில் இணைந்தது குறித்த தன்னுடைய உணர்வுகளையும், சிஎஸ்கே ஜெர்சி அணிந்தபோது ஏற்பட்ட உணர்வு குறித்தும் பேசியுள்ளார். அதாவது, சிஎஸ்கே வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், ''மஞ்சள் நிற ஜெர்சியை அணியும் நாளிற்காக காத்திருந்தேன், அடர்ந்த நிறத்திலான ப்ளூ, ப்ளாக், ப்ரவ்ன் ஜெர்சிகளை அணிந்ததைவிட மஞ்சள் நிற ஜெர்சியை அணிவது புத்துணர்ச்சியாக இருக்கிறது. இதை அணிந்த போது வித்தியாசமாகவும், ஒரு சாம்பியனை போலவும் உணர்ந்தேன'' என பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
தற்போது, சென்னை அணியின் கைவசம் ரூபாய் 43 கோடி மினி ஏலத்திற்கு உள்ளது. அவர்கள் விடுவித்த வீரர்களில் பதிரானா, கான்வே, ரவீந்திராவை தங்களது கையிருப்பு தொகை மூலமாக மீண்டும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த சீசனில் இவர்கள் 03 பேரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் மோசமான தொளிவிக்கு பிறகு, மற்ற அணியைப் போல அணியில் இளம் வீரர்களின் தாக்கத்தை அதிகரிக்கவே சென்னை அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
English Summary
Sanju Samson said he felt like a champion when he wore the csk yellow jersey