Google Gemini 3-இன் சிறப்பம்சங்கள்: ரூ.35,100 தொகுப்பை இலவசமாக பெறுவது எப்படி..? ஜியோ வாடிக்கையாளருக்கு ஜாக்பாட்..!
Google Gemini 3 Features and How to Get Rs 35100 Package for Free
கூகிள், தன்னுடைடைய ஜெமினி 3 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இருக்கிறது. AI பந்தயத்தில் முன்னணியில் வைத்திருக்க ஜெமினி 3 உதவும் என கூகிள் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜெமினி 3 என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன. அதை இலவசமாக பெறுவது எப்படி..? என்பது குறித்து அறிந்துக்கொள்ளலாம்.
அதாவது, ஆல்ஃபபெட்டின் கூகிள், அதன் artificial intelligence model-ஆன ஜெமினியின் சமீபத்திய பதிப்பை கடந்த செவ்வாய் கிழமை அறிமுகப்படுத்தியது. இது Search engine, AI ஸ்டுடியோ மற்றும் ஜெமினி செயலி உள்ளிட்டவைகளில் உடனடியாகக் கிடைக்கும். இது second generation model-க்கு பிறகு 11 மாதங்கள் கழித்து அறிமுகமாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தினுடைய blog post-இல் இதுகுறித்து பேசிய நிறுவனர் சுந்தர் பிச்சை கூறுகையில்; "our most intelligent model" என இதனை குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜெமினி நிறுவனம், இப்போது 650 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் 13 மில்லியன் டெவலப்பர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஜெமினி 3-ஐ பொறுத்தவரை கூகிள் தனது புதிய மாடலை முதல் நாளிலிருந்தே அதன் தேடுபொறியில் இணைத்தது முதல் முறையாகும் என்றும், கடந்த காலங்களில், ஜெமினியின் புதிய பதிப்புகள் கூகிளின் அதிகம் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் கொண்டுவர வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனது என்று சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.

அதாவது, புதிய மாடல்களை வெளியிடுவதிலும், அதை முன்பை விட வேகமாக மக்களுக்குக் கொண்டு செல்வதிலும் ஜெமினி ஒரு புதிய வேகத்தை அமைத்துள்ளது என்று தாங்கள் நம்புவதாக கூகிளின் chief AI architect குறிப்பிட்டுள்ளார்.
ஜெமினி 03 உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் இலவசமாக பெறுவது எப்படி..?
கூகிளின் பிரீமியம் AI சந்தா திட்டத்தின் பணம் செலுத்தும் பயனர்கள், AI பயன்முறையில் ஜெமினி 03 திறன்களை அணுக முடியும். மிகவும் சிக்கலான reasoning திறன்களுடன் இது கிடைக்கும். இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கிடைக்கும்.
அத்துடன், ஜெமினி ப்ரோ மற்றும் அல்ட்ரா பயனர்கள் அதிக வரம்புகளுடன் இதனை அணுக முடியும். மேலும், கூகிள் நிறுவனம் "ஜெமினி ஏஜென்ட்" ஐ அறிமுகப்படுத்தியது. இது பயனரின் இன்பாக்ஸை ஒழுங்கமைத்தல் அல்லது பயண ஏற்பாடுகளை முன்பதிவு செய்தல் போன்ற பல படி நிலைகளில் பணிகளை முடிக்கக்கூடிய ஒரு அம்சமாகும்.

இதனையடுத்து ரிலையன்ஸ் ஜியோ, கூகிளுடனான தனது AI பார்ட்னர்ஷிப்பில் ஒரு பெரிய upgrade-ஐ அறிவித்துள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு ஜியோ அன்லிமிடெட் 5G வாடிக்கையாளரும் கூடுதல் செலவில்லாமல் 18 மாதங்களுக்கு ₹35,100 மதிப்புள்ள தொகுப்பு கூகிள் ஜெமினி ப்ரோ திட்டத்தைப் பெறுவார்கள்.
இலவச ஜெமினி ப்ரோ திட்டத்தை பயனர்கள் எவ்வாறு பெறலாம் என்று பார்க்கும்போது, மைஜியோ செயலிக்குள் சென்று, Claim Now-ஐ கிளிக் செய்யவும். Google கணக்கில் உள்நுழையவும். இதனை அடுத்து உடனடியாக ஜெமினி 03 பயன்பாட்டுக்கு வரும்.
English Summary
Google Gemini 3 Features and How to Get Rs 35100 Package for Free