'உங்களுக்கு எத்தனை கணவர்?' விஜே பார்வதியிடம் சர்ச்சைக் கேள்வியை கேட்ட கமருதீன்!
big boss 9 vj parvahy kamruthin controversy q
சென்னை: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், போட்டியாளர் கமருதீன், வி.ஜே. பார்வதியிடம் கேட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அவர்கள் இருவருக்குமிடையே விரிசலை அதிகரித்துள்ளது.
நிகழ்ச்சியின் ஏழாவது வாரத்தில், வீட்டு வேலைகளை அணிகளாகப் பிரித்துச் செய்யும் போட்டி நடைபெற்றது. இதில், பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்க்க வேண்டும் என்று பிக் பாஸ் நிபந்தனை விதித்திருந்தார்.
பொழுதுபோக்கிற்காக அமித் பார்கவ் உடன் அவரது மனைவி வேடத்தில் பார்வதியும், தங்கை வேடத்தில் வியானாவும் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அமித் பர்கவ் நகைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் வந்த கமருதீன், பார்வதியைப் பார்த்து, "உங்களுக்கு எத்தனை கணவர்?" என்று கேட்டுவிட்டுச் சென்றார்.
அங்கிருந்த மற்றவர்கள் அதைப் பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு சிரித்தாலும், பார்வதி இந்தக் கேள்வியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் தன்னைக் குறிவைத்துத் தாக்கும் நோக்குடன் இந்தக் கேள்வியைக் கமருதீன் கேட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தன்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய கமருதீன் இந்தக் கேள்வியைக் கேட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பார்வதி குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும், கமருதீனின் கேள்வியில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், பார்வதி இதைப் பெரிதுபடுத்துவதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
big boss 9 vj parvahy kamruthin controversy q