பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை ஊழியருடன் கடத்தி ரூ.7 கோடி கொள்ளை: பட்டப்பகளில் மர்மநபர்களின் துணிகரம் செயல்..! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில், வரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் ஏடிஎம் வாகனத்தில் இருந்த ரூ.7 கோடியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பட்டப்பகலில் இந்த கொள்ளைச் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

ஜெபி நகரில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயுடன் ஏடிஎம் வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் ஜெயாநகர், அசோக் பில்லர் அருகே வந்தபோது, சொகுசு கார் ஒன்றில் வந்த சிலர் இந்த வேனை மறித்துள்ளனர். மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிய அவர்கள், வேனில் உள்ள ஊழியரை மிரட்டி ரூ. 7 கோடியுடன் தங்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். 

பின்னர், டெய்ரி சர்க்கிள் அருகே காரை நிறுத்தி, வங்கி ஊழியரை கீழே தள்ளிவிட்டு அருகில் உள்ள பாலத்தில் வண்டியுடன் தப்பியுள்ளனர். வினாடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியரிடம் விசாரணை நடத்திய போலீசார், சொகுசு வேன் பன்னார்கட்டா சாலையில் சென்றிருப்பதை ஊர்ஜிதம் செய்துள்ளனர். பின்னர், வேனை பிடிக்க, அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது வேனில் இருந்த ரூ.7.11 கோடியும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நிகழ்ந்த துணிகர கொள்ளையைத் தொடர்ந்து, சொகுசு வேன் எங்கிருந்து வந்தது..? அதன் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை கண்டறிய, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 7 crores stolen by hijacking ATM vehicle with employee in Bengaluru


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->