நடிகர் பிரேம்ஜிக்கு பெண் குழந்தை: 47 வயதில் தந்தையானார்!
premgi now girl baby dad
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பவர் நடிகர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இந்தத் தம்பதிக்கு இன்று (நவம்பர் 19, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த நற்செய்தியை 'வல்லமை' திரைப்பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரேம்ஜிக்கு குழந்தை பிறந்திருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஒட்டி, திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது. பிரேம்ஜி - இந்து தம்பதிக்குத் திரையுலகினர் தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.