'தேர்தலில் போட்டியிடாதது தவறு; ஆனால், பீஹாரில் வெற்றி பெறாமல் பின்வாங்க மாட்டேன்': பிரசாந்த் கிஷோர் சூளுரை..!
Prashant Kishor says he will not back down without winning in Bihar
சமீபத்தில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளதோடு, அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்ற எனது முடிவு தவறாக மக்கள் நினைதந்திருக்கலாம். தேர்தலில் வெற்றிகரமான முடிவைப் பெற நாம் நிறைய உழைக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி 04 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி பெற தனது முயற்சி தொடரும் என்றும், பீஹாரில் வெற்றி பெறாமல் தான் பின்வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், தேர்தலுக்கு சற்று முன்பு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசாங்கம் ஒவ்வொரு தொகுதியிலும் 60,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்காவிட்டால், அவரது அரசாங்கம் வெறும் 25 இடங்கள் கூட வெற்றி பெற்றிருக்காது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மக்களின் பணத்தில் ரூ.40,000 கோடியை மட்டுமே அவர்களுக்கு வழங்கியுள்ளது. அதில் பெரும்பகுதியை தேர்தலுக்கு சற்று முன்னதாகவே வழங்கியுள்ளதாக என்று பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Prashant Kishor says he will not back down without winning in Bihar