நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற பைக்!ஹீரோ புதிய பைக் குறைவான விலையில்.. இனி மைலேஜ் பிரச்சனை இல்லை!ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த Hero Glamour X 2025! - Seithipunal
Seithipunal


நீண்டநாள் காத்திருந்த நிலையில், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது புதிய பைக் ஹீரோ கிளாமர் எக்ஸ் (2025 Hero Glamour X)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வெரியண்ட்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் மாடலின் விலை ரூ.99,999 ஆகும். இந்த பைக்கிற்கான புக்கிங் ஆகஸ்ட் 20 முதல் தொடங்குகிறது.

புதிய கிளாமர் எக்ஸ், ஸ்டைல், டெக்னாலஜி, கம்ஃபர்ட், பெர்ஃபார்மன்ஸ் ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. H-வடிவ LED ஹெட்லாம்ப், டெய்ல்லாம்ப், டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை பைக்கிற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும் அகலமான ஹேண்டில், வசதியான பில்லியன் சீட், 790 மிமீ சீட் உயரம், 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை நகரப் பயணத்திற்கும், ஹைவே பயணத்திற்கும் ஏற்றதாக இருக்கின்றன.

இந்த பைக்கின் முக்கிய அம்சங்களில் Cruise Control, Ride-by-Wire Technology, Electronic Throttle Body போன்றவை அடங்கும். தற்போது பெரும்பாலான பைக்குகளில் இல்லாத கிக் ஸ்டார்ட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலைகளில் உதவும் Panic Brake Alert, ஒளி தன்னிச்சையாக மாறும் Ambient Light Sensor ஆகியவை கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

மேலும், இந்த பைக்கில் 60-க்கும் மேற்பட்ட LCD டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன. அதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரைடு மோட் தேர்வு, கியர் இன்டிகேட்டர், Distance-to-Empty, i3s ஆன்/ஆஃப் இன்டிகேட்டர், க்ரூஸ் மோட் நிலை போன்றவையும் அடங்கும். சீட்டின் கீழ் சிறிய ஸ்டோரேஜ், Type-C USB சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ், 125cc Air-Cooled, 4-Stroke Fuel Injection Engine கொண்டு வருகிறது. இது 8,250 RPM-ல் 11.4 bhp பவரையும், 6,500 RPM-ல் 10.5 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும் Balance Shaft, Silent Cam Chain ஆகியவை வைப்ரேஷனை குறைத்து ஸ்மூத் ரைடிங் அனுபவத்தை தருகின்றன.

இந்த பைக்கில் Eco, Power, Road என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. பாஸ் சவுண்ட் கொண்ட எக்ஸாஸ்ட், பைக்கிற்கு பிரீமியம் உணர்வை தருகிறது. ஹீரோவின் AERA Technology மூலம் சிறந்த டிராட்டில் ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.

மொத்தம் 5 நிறங்களில் கிடைக்கும் ஹீரோ கிளாமர் எக்ஸ், குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் 125cc செக்மென்ட்டில் கேம்-செஞ்சர் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பயணத்திற்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் இந்த பைக், மைலேஜ் மற்றும் கம்ஃபர்ட் தேடும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A bike suitable for middle class families Hero new bike at a low price No more mileage problems Hero MotoCorp introduces Hero Glamour X 2025


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->