பிளாஸ்டிக் இல்லாத தமிழகம்: நெகிழிக்கு பதில் மாற்று உபயோகப் பொருட்களாக எதை பயன்படுத்தலாம்!
PlasticFreeTN Ban Plastic Tomorrow
நாளை முதல் தமிழகத்தில், நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக எந்தெந்த பொருட்களுக்கு பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:
கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* மக்காத பிளாஸ்டிக் தட்டுகள்
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
* நீர் குவளைகள்
* தண்ணீர் பாக்கெட்டுகள்
* பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்
* பிளாஸ்டிக் கைப்பை
* பிளாஸ்டிக் கொடி.
மாற்று உபயோகப் பொருட்கள்:
* துணிப்பைகள்
* காகித உறைகள்
* மண் குடுவைகள்
* வாழை இலைகள்
* பாக்குமட்டைகள் தட்டுகள்
* தாமரை இலைகள்.

மேற்கொண்ட பொருட்களை பிளாட்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.
English Summary
PlasticFreeTN Ban Plastic Tomorrow