தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவதே பக்ரீத் திருநாளின் நோக்கம் : இஸ்லாமியர்கள் அனைவருக்கும் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து.., - Seithipunal
Seithipunal

தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவதே பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: தியாகத்தைப் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பது தான் இந்த தியாகத் திருநாள் மூலம் மக்களுக்கு உணர்த்தப்படும் செய்தியாகும். அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டும் தான் மகிழ்ச்சிப் படுத்தும். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் தியாகத்தை போற்றினாலும் அவர்கள் மீது உலகின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் வன்முறை ஏவப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இப்போது கூட மியான்மரின் ரோகிங்கிய பகுதியில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். தியாகத்தை வலியுறுத்தும் ஓரு மார்க்கத்திற்கு இனப்படுகொலையை பரிசாகத் தருவது ஏற்கத்தக்கதல்ல. அன்பே அனைவரையும் பிணைக்கும் சக்தி என்பது தான் இஸ்லாமும், நபிகளும் வழங்கிய போதனை ஆகும். இதை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S



கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->