பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?.! தடுக்க என்ன செய்வது?.!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?.!!  - Seithipunal
Seithipunal


பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்ற பிரச்சனையானது ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையானது வெயில் காலத்தில் ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது என்ற காரணத்தாலும்., பல பெண்களுக்கு போதியளவு விழிப்புணவு இல்லாததன் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் செல் சுவர்களில் நிறமற்ற மற்றும் லேசான பிசுபிசுப்புத்தன்மை திரவமானது இயற்கையாக சுரக்கும். இந்த திரவத்தில் இருக்கும் அமிலத்தன்மையின் காரணமாக பிறப்புறுப்புகளில் தொற்றுகள் மற்றும் கிருமிகளின் தாக்கம் ஏதும் ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கும். எதிர்பாராத விதமாக பிறப்புறுப்புகள் தொற்றுகளால் பாதிக்கப்படும் பட்சத்தில்., அமிலம் சுரந்து நமது பிறப்புறுப்பை பாதுகாக்கும். 

இந்த சமயத்தில்., பிறப்புறுப்பில் சுரக்கும் திரவம் வெள்ளை., சிவப்பு., மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். வெள்ளைப்படுத்தலுக்கு முன்னதாக தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து சிகிச்சை எடுக்காத பட்சத்தில்., கர்ப்பப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களை பொறுத்த வரையில்., இனப்பெருக்க உறுப்பும் - சிறுநீர் பாதையும் நெருக்கமாக அமைந்திருக்கும். 

இதன் காரணமாக தொற்று பிறப்புறுப்பின் மூலமாக வேகமாக பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட தெரியாமல் கூட வெள்ளைப்படுதல் ஏற்படும். இந்த பிரச்சனை சில நேரங்களில்., அடுத்தடுத்த நாட்களில் சரியாகலாம். இந்த வெள்ளைப்படுதல் பருவமடையும் சில நாட்களுக்கு முன்னர்., மாதவிடாய்க்கு முன்னர் மற்றும் பின்னர் உள்ள நாட்கள்., கர்ப்பமான நேரத்தில் மட்டும் ஏற்படும். 

வெள்ளைப்படுதலை சில தொற்றுகள் மற்றும் அறிகுறிகள் மூலமாகவும் நாம் கண்டறியலாம். அது குறித்த இனி காண்போம். 

பொதுவாக பாதுகாப்பற்ற தாம்பத்தியம் மற்றும் பிறப்புறுப்பின் சுகாதாரத்தை மேற்கொள்ளாமல் இருத்தல்., பாதுகாப்பில்லாத தாம்பத்தியம் போன்ற காரணத்தால் பிறப்புறுப்புகள் பாதிப்பிற்கு உள்ளாகும். இதனால் பிறப்புறுப்பில் வீக்கம்., புண் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டு இருப்பின் அது பால்வினை தொற்றுகள் என்று அழைக்கப்படும். 

இந்த பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பிரச்சனையானது தீவிரமாக இருப்பின் சாம்பல் நிறத்தில் பாதிப்பானது தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம்., இந்த பாதிப்பானது சிறுநீர் பாதை மற்றும் கர்ப்பப்பை தொற்றானது ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் இயற்கையான நுண்ணுயிரிகள் மூலமாக காளான் தொற்றானது ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்புகள் சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஏற்படும் எரிச்சல்., பிறப்புறுப்பில் உண்டாகும் புண் போன்ற காரணத்தால் ஏற்படும். இந்த பாதிப்பின் தாக்கத்தால் வெள்ளைப்படுதல் வெண்மை நிறத்தில் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கர்ப்பப்பையின் வாயில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  

இதுமட்டுமல்லாது உடலில் ஏற்படும் நோய்கள்., அஜீரண கோளாறுகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் பாக்டீரியா தொற்று., பிறப்புறுப்பின் தொற்றுக்கு வழிவகை செய்கிறது. இதனால் சிறுநீர் கழிக்கும் சமயத்தில் பிறப்புறுப்பில் அதிகளவு வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் வெள்ளைப்படுதல் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். 

பொதுவாக வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில்., வெள்ளைப்படுத்தலின் திரவத்தை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கி., பால்வினை தொற்றுகள் ஏற்பட்டுள்ளதா? என்றும்., தொடர் வெள்ளைப்படுதல் மற்றும் துர்நாற்றம் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகவும். 

வெள்ளைப்படுதலுக்கு பொதுவான அறிகுறிகளாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஏற்படும் எரிச்சல்., பிறப்புறுப்பில் ஒவ்வாமை., பெண்ணுறுப்பில் சிவந்த நிறம் காணப்படுதல்., பிறப்புறுப்பில் புண் மற்றும் கொப்புளங்கள்., தாம்பத்தியத்தின் போது அதிகளவிலான வலி போன்ற அறிகுறிகள் உள்ளது. 

இதனை தவிர்ப்பதற்கு பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளுதல்., பெண்களின் மாதவிடாய் நேரம் மற்றும் தாம்பத்தியத்திற்கு பின்னர் பிறப்புறுப்பில் உள்ள சுகாதாரத்தில் சரியாக இருத்தல்., உள்ளடையை இயன்றளவு பருத்தியினால் ஆன ஆடையாக தேர்வு செய்தல் பாதுகாப்பானது. கசா நோய்., மலேரியா நோய் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற காரணத்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனத்தை உபயோகம் செய்வது மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். 

வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பின் கீழாநெல்லியை அரைத்து பசுமாலில் கலந்து., தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்யலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மருத்துவரை ஆலோசனை செய்து சிகிச்சை பெற்று கொள்வது நல்லது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why girls affected LEUCORRHEA or vellaipaduthal problem solution of this problem


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal