கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய பாலியல் நோய்கள்..! எப்படி பரவும்? தவிர்ப்பது எப்படி?.!!  - Seithipunal
Seithipunal


தம்பதிகளின் தாம்பத்திய சமயத்தின் போது பரவும் நோய்களை ஆங்கிலத்தில் Sexually Transmitted Diseases(STD) என்றும்., Reproductive Tract Infections (RTI) என்றும் கலவிக்கான மருத்துவர்கள் கூறுவார்கள். ஆண்களின் ஆணுறுப்பு பின்பகுதியில் காணப்படும் சிறுசிறு கட்டிகள் சிலருக்கு பதற்றத்தை உண்டாக்கினாலும்., இவை விரைகள் மற்றும் விந்துப்பை தொங்குதசை னர்களால் உருவாக கூடியவை என்பதால் கவலையுற்ற தேவையில்லை. ஆண்களை தாக்கும் விரைப்புபுற்றுநோய் அபாயம் மிக குறைவானதாகும். 

Sexually Transmitted Diseases, STD, Sexually Transmitted Diseases(STD),

பெண்களுக்கு பாலியல் தொற்று இருக்கும் பட்சத்தில்., அந்த பெண்ணுடன் தாம்பத்திய மேற்கொண்ட ஆணிற்கு 2 நாட்கள் முதல் 5 நாட்களுக்குள்ளாகவே கொனோரியா மற்றும் கிளமிடியா போன்ற நோய்களுக்கு உண்டான ஆரம்ப அறிகுறிகள் வெளியாகலாம் அல்லது 3 வாரங்களுக்கு பின்னர் இந்த அறிகுறி வெளியாகும். கொனோரியா மற்றும் கிளமிடியா நோய்களின் அறிகுறியாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் சிரமம் மற்றும் வலி., விறைகளின் போது வலியுடன் வீக்கம் போன்றவற்றை அறிந்து இதன் தாக்கத்தை உணரலாம். 

தாம்பத்தியம், COUPLE ENJOY, AFFAIR, ILLEGAL AFFAIR,

Tamil online news Today News in Tamil

பிறப்புறுப்பு பகுதியில் திடீரென மரு மற்றும் புண்கள் உண்டாகி., புண்கள் உண்டான சில வாரத்திலேயே தோலின் நிறம் சிவப்பாக காணப்படும் பட்சத்தில்., இந்த புண் மேகபுண்ணாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை இருபாலருக்கும் பொருந்தும். நமது உடலில் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்றை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சையை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும். தாம்பத்தியத்தின் போது தம்பதிகளின் இணைவால் பெண்ணின் யோனி அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகிறது. 

கருப்பை புற்றுநோய், கருப்பை, மாதவிடாய் கோளாறு,

தொற்றுகளால் பாதிக்கப்பட்ட விந்தணுவானது., பெண்ணுறுப்பில் விந்தணு செலுத்தப்பட்ட பின்னர் நீண்ட நேரம் பெண்ணுருப்பில் இருப்பதால்., கர்ப்பப்பை மற்றும் சினைக்குழாய்., சினைப்பை உறுப்புகளில் தொற்று ஏற்படுவதற்கும் அதிகளவு வாய்ப்புள்ளது. பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கும் தொற்றுகளை கவனிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும்., இது பெண்களை நேரடியாக பாதிக்காது. இதன் அறிகுறிகளான நீண்ட கால வயிற்றுவலி மற்றும் முதுகுவலி இருக்கும் பட்சத்தில் கவனமாக இருப்பது அவசியம். 

வயிற்று வலி, STOMACH PAIN, மாதவிடாய், மாதவிடாய் வலி,

Tamil online news Today News in Tamil

பெண்களை பொறுத்த வரையில் கொனோரியா மற்றும் கிளமிடியா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அடிவயிற்றில் வலி., சிறுநீர் அடிக்கடி கழிப்பது மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள்., காய்ச்சல் போன்ற அறிகுறிகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். "பரங்கி நோய்" என்று பரவலாக அழைக்கப்படும் "யாஸ்" என்ற நோய் தொற்றானது தீவிரமடையும் பட்சத்தில் பிறருக்கும் பரவும் தன்மையை தன்னுள் கொண்டிருக்கும். பாலியல் தொல்லையை பொறுத்த வரையில் நாம் அறிந்திருக்கும் Human Immunodeficiency Virus(HIV) என்கிற எய்ட்ஸை உருவாக்கும் வைரஸ்., நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் நோயெதிர்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் ஆற்றலை கொண்டது. 

எய்ட்ஸ், HIV, AIDS,

எய்ட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் சேர்ந்து தங்குதல் மற்றும் அவருடைய பொருட்களை பயன்படுத்துதல்., கழிவறையை உபயோகம் செய்தல்., கட்டித்தழுவுவது., கைகுலுக்குவது மற்றும் எச்சில்., முத்தமிடல் போன்ற செயல்களை மேற்கொண்டால் எய்ட்ஸ் தொற்று பரவாது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீர்., இரத்தம் போன்றவற்றை அகற்றும் போது பாதுகாப்பாக அகற்றுவது நல்லது. சிறுநீர் தொற்றை பொறுத்த வரையில்., ஆண்களை காட்டிலும் பெண்களை அதிகளவு தாக்குகிறது.

பிறப்புறுப்பு. பிறப்புறுப்பு தொற்று, பெண்களின் பிறப்புறுப்பு, periods, சிறுநீர் தொற்று,

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது., சிறுநீர் கழிக்கும் சமயத்தில் எரிச்சல் போன்றவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள் ஆகும். தாம்பத்தியம்., தாய்மை அடைதல்., சிறுநீர் கழிக்கும் வழியில் ஏற்படும் அடைப்பு சிறுநீர் தொற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பெண்ணுறுப்பில் உருவாகும் மூன்று வகையான தொற்றானது டிரைகோமோனஸ் கிருமித்தொற்று, ஈஸ்ட் கிருமித்தொற்று, பாக்டீரியா கிருமித்தொற்று என்று குறிப்பிடப்படுகிறது. மேலும்., வருடத்திற்கு சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகிறது. சுகாதாரம் என்பது கண்டிப்பாக இருபாலரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான ஒன்றாகும். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

know about sexual diseases and solutions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->