பெண்ணுறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையில் இருந்து உடனடி விலக்கம் அடைய செய்ய வேண்டியது என்ன?.!! - Seithipunal
Seithipunal


இன்றைய காலத்தில் உள்ள பெண்கள் அதிகளவில் கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகளவில் உபயோகம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களில் இருக்கும் ஆல்கஹாலின் காரணமாக அரிப்பு., எரிச்சல்., வறட்சி மற்றும் நாப்கின் அரிப்பு., பெண்ணுறுப்பு பகுதியில் அதிகளவில் வியர்ப்பது மற்றும் அரிப்பது., உடல் பருமன் போன்ற பிரச்சனையால் அவதியுற நேரிடும்.  

இந்த விஷயத்தை பொறுத்த வரையில் இதற்கு மேலும் பல காரணியாக யோனி பகுதியில் இருக்கும் முடிகளை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் லேசர் சிகிச்சை முறைகள்., வேக்சிங் போன்ற செயல்பாடுகளால் அவ்விடத்தில் இருக்கும் சருமம் சிவந்து அரிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு கீரிம்கள் தவித்து பிற முறைகளையும் உபயோகம் செய்யலாம். 

சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை பாதிப்பான இடத்தில் இரண்டு முறை விட்டு வந்தால்., யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பானது நீங்கும்., ஓட்ஸை 1 தே.கரண்டி அளவில் எடுத்து சூடான நீரை சேர்த்து பேஸ்ட் போன்று மாற்றி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி., சுமார் 15 நிமி. கழித்த பின்னர் இளம் சூடுள்ள நீரால் கழுவி வந்தால் அரிப்பானது நீங்கும். 

மஞ்சள் அரை தே.கரண்டி எடுத்து கொண்டு அதனுடன் 1 தே.கரண்டி பட்டரை (வெண்ணெய்யை) சேர்த்து பேஸ்ட் போன்று மாற்றி அரிப்புள்ள இடத்தில் தடவி., சுமார் 30 நிமி. கழித்த பின்னர் இளம் சூடுள்ள நீரை வைத்து கழுவினால் அரிப்பானது நீங்கும்., இந்த முறையை நாளொன்றுக்கு இரண்டு முறை மேற்கொள்ளலாம். 

வேப்பிலையில் கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்த மகத்துவமான மருத்துவம் ஆகும். இதில் இருக்கும் ஆல்கலைடு என்ற பொருளின் காரணமாக இயற்கையான அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு ஆண்டி பாக்டீரியல்., பூஞ்சை எதிர்ப்பு பொருள்., ஆண்டி ஆக்சிடன்ட்., ஆண்டி வைரலாக செயல்படுகிறது. இந்த முறையை பாதிக்கப்பட்ட இடத்தின் வெளிப்புறத்திலும்., சருமத்திற்கு உள்புறத்திலும் உபயோகம் செய்யலாம். 

ஒரு கையளவு வேப்பிலையை எடுத்து கைகளால் நசுக்கி அல்லது அம்மியில் வைத்து மையாக அரைத்து., அரிப்பு உள்ள இடத்தில் தடவிய பின்னர் சுமார் 30 நிமி. கழித்த பின்னர் கழுவினால் அரிப்பானது நீங்கும். இதனை நாள் ஒன்றுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம். கற்றாழையின் ஜெல்லை தனியாக எடுத்து அரிப்புள்ள இடத்தில் தடவி உலர்ந்த பின்னர் அந்த இடத்தில் நீரை வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை நாளொன்றுக்கு சுமார் இரண்டு முறைகள் மேற்கொள்வதன் மூலமாக அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

இந்த முறைகள் மட்டுமல்லாது இந்த பிரச்சனை ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளும் உள்ளது., இதன் மூலமாக இந்த பிரச்சனைகள் ஏற்படாத முறையிலும் நாம் நம்மை கவனித்து கொள்ள இயலும்..

பாரம்பரியமான இயற்கையான காற்றோட்டம் வழங்கும் உள்ளாடைகளை அணிய வேண்டும்., ஆடம்பரம் மற்றும் தற்போதைய கலாச்சாரம் என்று எண்ணி இறுக்கமான உள்ளடைகளை அணிய கூடாது. தினமும் குளிக்கும் சமயத்தில் அந்த இடங்களில் நன்றாக சோப்பை பயன்படுத்தி அழுக்குகளை நீக்கி குளிக்க வேண்டும். 

தினமும் குளித்து முடித்த பின்னர் முடிந்தளவு பிறப்புறுப்பு பகுதியில் பேபி பவுடரை உபயோகம் செய்யலாம்., குளித்து முடித்த பின்னர் அவசர கதியுடன் சில இடங்களுக்கு புறப்படுகிறோம் என்ற பெயரில் அந்த இடத்தை உலர விடாமல் உள்ளாடையை அணிந்து ஆடைகளை அணிய கூடாது. பிறப்புறுப்புகள் நன்றாக உலர்ந்த பின்னர் ஆடையை அணிய வேண்டும். 

உங்களின் கணவருடன் உல்லாசமாக இருக்கும் சமயத்தில் ஏற்படும் உராய்வு பிரச்னையை குறைப்பதற்கு எண்ணெய்களை உபயோகம் செய்யலாம். வெயில் காலத்தில் அல்லது சாதாரண நாட்களிலும் நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லும் பயணத்தை மேற்கொள்ளாதீர்கள். எந்த சமயத்திலும் ஈரமான துணிகள் அல்லது உள்ளாடையை உபயோகம் செய்யாதீர்கள். பிறப்புறுப்பு பகுதிகளில் இருக்கும் முடிகளை நீக்கும் சமயத்தில் கவனமாக இருப்பது அவசியம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cure itching birth place in quick and easy method use this hints and tips


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->