விளம்பரமில்லா ட்விட்டர் - எலான் மஸ்க் தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த எலான் மஸ்க், அமெரிக்கா நாட்டைத் தலைமையிடமாக கொண்ட பிரபல சமூகவலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்வசப்படுத்தினார்.

அன்று முதல் டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். முதலில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த சில முக்கிய அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார். 

அதன் பின்னர், ட்விட்டரின் அதிகார்பூர்வக் கணக்கு என்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூடிக் சேவைக்கு மாதாந்திர கட்டணத்தை அறிமுகப்படுத்தி, பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வந்தார். மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்று அதிரடியாக செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், நேற்று எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "டிவிட்டரில் விளம்பரங்கள் மிகவும் பெரிய அளவிலும், அடிக்கடியும் வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் வரும் வாரங்களில் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், விளம்பரம் இல்லாமல் டுவிட்டர் தளத்தை அணுகும் வகையில் புதிய சந்தாதாரர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zero addvertisement in twitter elon musk information


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->