ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் அதிபர் ஜெலன்ஸ்கி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில்,  தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் கார்கீவ் பகுதியில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒரே நாளில் கைப்பற்றியுள்ளது.

மேலும் டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் ஆகிய வடகிழக்கு நகரங்களை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் மீட்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவிடமிருந்து மீட்கப்பட்ட புச்சா நகரில் இருந்த மோசமான காட்சிகளைப் போலவே இஸியம் நகரிலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் மக்களுக்கு அவர்கள் இழந்த வாழ்க்கை திரும்பவும் கிடைத்துவிட்டது எனவும், உக்ரைன் ராணுவத்தினரை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனா் என்று தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பகுதிகள் மீண்டும் எதிரிகளின் கைகளுக்குச் செல்லாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று ஸெலென்க்ஸி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky visits rescued places in ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->