உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களைக் கொண்ட பட்டியலை அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு உள்ளிட்ட நான்கு துறைகளில் இருந்து  தயாரிக்கப்படுகிறது. 

அதன் படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண் என்று ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். 

இந்த பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளனர். 

இந்தப் பட்டியலில் மிக முக்கியமாக, 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆறு பேர் இடம்பிடித்துள்ளனர். 

அதில், நாட்டின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாக இடம்பிடித்து வரும் அவர், நான்காவது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி படுத்தியுள்ளார். 

இதேபோன்று, எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 53-வது இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

மேலும், கிரண் மஜூம்தார்-ஷா பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 72-வது இடத்தையும், நியாகா நிறுவனர் பால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்துள்ளார். 

அதிலும் குறிப்பாக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ரோஷினி நாடார் மல்கோத்ரா, கிரண் மஜூம்தார்-ஷா, பால்குனி நாயர் உள்ளிட்டோர் கடந்த ஆண்டிலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worlds most powerful girls list on nirmala seetharaman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->