கலங்கிய உலக நாடுகள்! திருத்தம் செய்யப்பட்ட புதிய வரி விதிப்பு வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய டிரம்ப்!
world turmoil Trump shocked by releasing a revised new tax bill
இந்தியா உட்பட பல நாடுகள் மீது புதிய வரி விதிப்பு தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இதில் பல நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10சதவிகிதம் முதல் 41சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், இந்தியாவிலிந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25சதவிகிதம், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30சதவிகிதம் மற்றும் தைவானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20சதவிகிதம் ஆகியவை அடங்கும்.
இதுமட்டுமின்றி,சிரியா நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41 சதவிகிதம் வரியை விதிக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.மேலும், செர்பியா மற்றும் ஈராக் மீது 35 சதவிகிதமும்,லாவோஸ் மற்றும் மியான்மர் மீது 40 சதவிகிதமும், சுவிட்சர்லாந்து மீது 39சதவிகிதமும், அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியும் 35 சதவீதமாக அதிகரித்து விதிக்கப்பட்டுள்ளது.இந்த திருத்தம் செய்யப்பட்ட புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
world turmoil Trump shocked by releasing a revised new tax bill