உலகிலேயே 2-வது பெரிய தங்க இருப்பு: 37% தங்கத்தை அமெரிக்காவிடம் இருந்து திரும்பப் பெறுகிறதா ஜெர்மனி...?
world second largest gold reserve Germany retrieving 37percentage gold from United States
உலக அளவில் சுமார் 3,350 டன் தங்க இருப்பைக் கொண்டு, இந்த வரிசையில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் ஜெர்மனி கம்பீரமாகத் திகழ்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் (1945), அமெரிக்காவுடன் நிலவிய ஆழமான ராஜதந்திர உறவின் அடையாளமாக, ஜெர்மனி தனது பெரும் பகுதி தங்கத்தை அமெரிக்காவின் பாதுகாப்பில் ஒப்படைத்தது.

தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனியின் மொத்த தங்க இருப்பில் 37 சதவீதம் (சுமார் 1,236 டன்) நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் பெட்டகங்களில் உறங்கிக் கொண்டிருக்கிறது.இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடியான வரிவிதிப்பு கொள்கைகளும், கிரீன்லாந்து விவகாரத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷமான நிலைப்பாடுகளும் ஜெர்மனிக்கு பெரும் தர்மசங்கடத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
"வருமானத்திற்காக டிரம்ப் எத்தகைய விபரீத முடிவையும் எடுக்கக்கூடும்; அவர் எப்போது என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது" என ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் மைக்கேல் ஜோகர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இதன் விளைவாக, ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான 'கிரீன் பார்ட்டி', நாட்டின் பொருளாதாரத் தன்னாதிக்கத்தைப் பாதுகாக்கவும், சர்வதேச மோதல்களின் போது ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்க்கவும், அமெரிக்காவிலுள்ள தங்கத்தை உடனடியாகத் தாயகம் கொண்டு வர வேண்டும் என அழுத்தமாகக் குரல் கொடுத்துள்ளது. உலகப் பொருளாதார அரங்கில் 'தங்க அரசியல்' குறித்த இந்த விவாதம் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஜெர்மனியின் இடம்: உலக அளவில் 2-வது பெரிய தங்க இருப்பு.
அமெரிக்காவில் உள்ள இருப்பு: 1,236 டன் (37%).
அரசியல் காரணி: அதிபர் டிரம்ப்பின் கணிக்க முடியாத பொருளாதாரக் கொள்கைகள்.
English Summary
world second largest gold reserve Germany retrieving 37percentage gold from United States