வீடியோ : நீருக்கடியில் மிகப் பெரிய தாவரம்.. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க்  விரிகுடாவில் இந்த தாவரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை விட சற்று பெரியது என தெரிவித்துள்ளனர். முதலில் இந்த செடியை பார்க்கும் போது இது ஒரு பெரிய கடல் புல்வெளி என்று நம்பியதாகவும், ஆனால் அது ஒரு விதையிலிருந்து பரவிய தாவரம் என்பது சோதனைகளில் முடிவில் தாங்கள் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த தாவரத்தின் வளர்ச்சியை பார்த்தால் இந்த தாவரம் சுமார் 4500 ஆண்டுகளாக வளர்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world largest plant in australia


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->