உலக சுகாதார தினம் இன்று... சுகாதாரத்தை போற்றுவோம்.!! - Seithipunal
Seithipunal


உலக சுகாதார தினம்:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். 

உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

வில்லியம் வேட்ஸ்வொர்த் :

உலகப் புகழ்பெற்ற கவிஞரும், கவிதையின் முன்னோடியுமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் 1787ஆம் ஆண்டு 14 வரி பாடல் ஒன்றை முதன்முறையாக எழுதினார். 1793ஆம் ஆண்டு தனது கவிதைகளைத் தொகுத்து, 'ஈவ்னிங் வாக் அன்ட் டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்ச்சஸ்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

மேலும் இவரது 'தி பிரிலூட்" தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறித்த இவரது 'சாலிட்டரி ரீப்பர்" என்ற கவிதை உலகப் புகழ் வாய்ந்தது.

கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவரும், காலத்தை வென்ற கவிதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞராக முத்திரைப் பதித்தவருமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1850ஆம் ஆண்டு மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world health day 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->