ரஷ்யா உக்ரைன் போர் : உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடனுதவி அளித்த உலக வங்கி.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் போரை நிறுத்தும்படி அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு சுமார் 723 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இது உக்ரைனில் பொருளாதார அவசரநிலையை மீட்பதற்கான நிதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Bank lends $ 723 million to Ukraine


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->