கூகுள் மேப்பை பார்த்து  கடலுக்குள் கார் ஓட்டிய பெண்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் கூகுள் மேப்ப்பை பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.

அந்த வகையில் தற்போது செல்போன் செயலிகளின் மூலமே உலகத்தின் மூலை முடுக்கில் என்ன நடந்தாலும் அதனை எளிதாக தெரிந்து கொள்கின்றனர். இதில் கூகுள் மேப்ஸ் எனப்படும் வழிகாட்டும் செயலியை பயன்படுத்தி பயணம் செய்யும்போது சில நேரங்களில் சம்பந்தம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விடுகிறது.

அந்த வகையில் மது போதையில் பெண் ஒருவர் தனது காரை கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி ஓட்டி வந்துள்ளார். ஆனால் கூகுள் மேப்பை நம்பி வந்த அவருக்கு கடலில் கொண்டு வழிகாட்டி உள்ளது. அவர்களும் கடல் என தெரியாமல் தண்ணீரில் நேராக காரை ஓட்டி வந்தனர்.

இதனையடுத்து கடலில் சிக்கிய அவர்களை அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணம் செய்தவர்கள் நிறைய பேர் இது போன்ற நீர் நிலைகளில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women drive a car in sea refer Google maps


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->