ரயிலைப் பிடிக்க ஓடிய பெண்.! உடல்நசுங்கி பலி.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் கணவர் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு வங்கியில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில், நேற்று கணவருடன் பெங்களூருவில் வசித்துவந்த காயத்ரி தனது மகள்களை அழைத்துக்கொண்டு பெங்களூரு - தனப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்றதில் காயத்ரி ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டுள்ளது. இதைப்பார்த்த காயத்ரி ரெயில் புறப்பட்டதால் வேகமாக ஓடிச்சென்று ரெயிலுக்குள் ஏற முயற்சி செய்துள்ளார். 

அப்போது, காயத்ரி நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்து சிக்கிக்கொண்டதில், வேகமாக சென்ற ரெயில் அவர் மீது ஏறியது. இதனால், காயத்ரி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதன் பின்னர் காயத்ரி உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died in railway track in maharastra nakpoor junction


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->