கைது செய்யப்பட்ட தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவி மீதும் ஊழல் குற்றச்சாட்டு: விசாரணை முடிவில் தண்டனை அறிவிக்கப்படும்..!
Wife of South Koreas jailed ex President Yoon arrested over corruption allegations
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்தாண்டு இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ, தனது கணவரின் அதிகாரத்தை பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணை முடிவில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளதாக தென் கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபரின் பட்டியலில் முன்னாள் அதிபர் மூன் ஜே இன். யூன் சுக் இயோல்க்கு முன்னதாக முதல் பெண் அதிபரான பார்க் கியூன்-ஹை, தாராளவாத கட்சியைச் சேர்ந்த ரோ மூ-ஹியூன் உள்ளிட்ட பல அதிபர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Wife of South Koreas jailed ex President Yoon arrested over corruption allegations