காபியில் பிளீச்சிங் பவுடர் - சிசிடிவியில் சிக்கிய மனைவி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ராபி ஜான்சன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெர்மனியில் குடியேறி வசித்து வந்தார். இந்த நிலையில், ராபிக்கு அவரது மனைவி மெலடி காபி மூலம் ப்ளிச்சிங் பவுடரை கலந்து ஸ்லோ பாயிஷனாக கொடுத்து வந்துள்ளார். 

இதற்கிடையே தனது மனைவி கொடுத்த காபி வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த ஜான்சன் அதன் காரணத்தை கண்டறிய முயன்றார். பின்னர் வீட்டில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்து, வெவ்வேறு சுவைக்கும் தண்ணீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதி செய்த ஜான்சன், கவனத்தை காபியின் பக்கம் திருப்பினார். 

அப்போது, காபியில் “அதிக அளவு குளோரின்” இருப்பது தெரிய வந்ததையடுத்து,
ஜான்சன் அமெரிக்காவிற்கு மீண்டும் குடியேறினார். இதைத் தொடர்ந்து, வீட்டில் கேமராக்களை அமைத்து கண்காணிக்க தொடங்கினார். 

அப்போது, அவரது மனைவி தனது காபி மேக்கிங் மெஷினில் குளோரின் சேர்ப்பதைக் கண்டார். இந்த சம்பவம் தொடர்பான, காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதன் படி போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் இறந்த பிறகு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக அவரைக் கொல்ல முயன்றிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife give coffee to husband mixed clorine powder


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->