வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னணி அதிரடி ஆட்டக்காரர் திடீர்  ஓய்வு முடிவு .. ரசிகர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளுடன் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் ,டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ரசல்,இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, வெளிநாடுகளில் நடைபெறும் பிரீமியர் போட்டிகளில் உள்ளோர்  அணிகளுக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் ரசல்.குறிப்பாக தன சொந்த நாட்டுக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர்கள் திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

 பல்வேறு காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக உறுதுணையாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர் ரசல், அவருக்கு  உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் ,ரசலின் ஆட்டத்தைக் காண அவர்கள் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பார் ,அவர் அடிக்கின்ற அடியெல்லாம் அப்படி இருக்கும்.அவருடைய திடீர் ஓவிய அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

37 வயதான ரசல், அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளுடன் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற ரசல் முக்கிய பங்கு வகித்தார்,56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 1,034 ரன்கள் எடுத்து, 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

 இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ரசல் விளையாடியுள்ளார்.84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 1,078 ரன்கள் எடுத்துள்ளார். 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்,
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Indies teams leading explosive player suddenly announces retirement fans shocked


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->