#பாகிஸ்தான் || நீதிமன்ற காவலில் இருந்த வாகனங்களில் திடீரென தீப்பிடிப்பு.! 440 இருசக்கர வாகனங்கள், 40 கார்கள் தீயில் எரிந்து நாசம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகி உள்ளன.

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள குல்ஷன்-ஐ-இக்பால் பகுதியில் உள்ள அஜீஸ் பூங்காவிற்கு அருகே நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

திடீரென வாகனங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கி அனைத்து வாகனங்களிலும் பரவியது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மூன்று மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 440 இருசக்கர வாகனங்கள், 40 கார்கள் மற்றும் பிற வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

மேலும் இந்த தீ விபத்து உயர் அழுத்த மின் கம்பிகளில் இருந்து தீப்பொறி ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vehicles in court custody caught fire in Pakistan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->