அமெரிக்கா | விபத்தில் இறந்த மாணவிக்கு பட்டம் - வாஷிங்டன் பல்கலைக்கழகம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஜானவி கண்டுலா  (வயது 23) தகவல் அமைப்புகள் பிரிவில் முதுகலை பட்டபடிப்பு இந்த ஆண்டு அவரது முடிந்து வருகின்ற டிசம்பர் மாதம் பட்டம் பெற இருந்தார். 

இந்நிலையே இவர் கடந்த ஜனவரி 23ஆம் தேதி இரவு சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த காவல்துறை கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் விபத்தில் பலியான மாணவிக்கு பட்டம் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'மாணவியன் இழப்பை சக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் ஆழமாக உணர்வார்கள். 

மாணவியின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது' என குறிப்பிட்டிருந்தார். 

மேலும் மாணவியின் இறப்பை கிண்டல் செய்த காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டை காவல்துறை அதிகாரிகள் சங்கம் மறுத்துள்ளது. வெளியான வீடியோவில் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் பல விவரங்கள் வெளிப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA Degree awarded  student died accident


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->