ரஷ்யாவால் நெருக்கடியில் இந்தியா: நாளை டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கூடுதல் வரி விதிக்கப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை..!
US warns of additional tariffs on India if Trump and Putin talks fail tomorrow
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்திருந்த நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெவித்துள்ள நிலையில், அமேரிக்கா-இந்தியா ஆகிய இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் இடையே பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், ரஷ்யா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், இந்தியா மீது 50 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாளை அலாஸ்காவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
US warns of additional tariffs on India if Trump and Putin talks fail tomorrow