ஒட்டுகுடல் வீக்கம் ஏற்படக்காரணங்கள் மற்றும் தீர்வு ...! - Seithipunal
Seithipunal


ஒட்டுகுடல் வீக்கம் ஏற்பட காரணங்கள் :
ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் ,(Right Lower Abdomen) உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்றது. இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும், பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.


ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் மூடப்படும் நேரத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு ஒட்டுக்குடலின் திசுக்கள் இறக்க நேரிடும். அதோடு உமிழ்நீர் போன்ற திரவமும், கிருமிகளும் சுரக்கப்பட்டு ஒட்டுக்குடல் வீங்குகிறது. 
மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
ஒட்டுக்குடல் கண்டறிய உதவும் மருத்துவ ஆய்வுகள் :
ரத்த பரிசோதனை - ரெத்த வெள்ளையணுக்களின் ,(white blood cells -WBC) எண்ணிக்கை அதிகரிப்பு.
ஸ்கேன் - மீயொலி சோதிப்பான் கணினி கதிரியக்க சோதிப்பான். 
தீர்வு என்ன?
அறுவை சிகிச்சைதான் தலைசிறந்ததாக கருதப்படுகிறது. 
உடனடியாக வலியையும் காய்ச்சலையும் குறைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் சரியான தீர்வு அறுவை சிகிச்சை தான். ஏனெனில் ஆண்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்டு வந்தாலும் முழுவதும் குணப்படுத்துதல் சந்தேகத்திற்குரியது. மேலும் ஒட்டுகுடலில் ஓட்டை விழும் வாய்ப்பும் அதனால் ஏற்படும் உயிர்சேதமும் மருத்துவ அவசர நிலமை என்று பட்டியலிடுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Causes and solutions for appendicitis


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->