அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - Seithipunal
Seithipunal


உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு, அல் கொய்தாவின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் சீல் படையினரால் சுட்டுக் கொன்றனர்.

பின் லேடனின் மறைவுக்கு பின்பு இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில், மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ள பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

"பயங்கரவாதத்திற்கு எதிராக நீதி வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்" என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒசாமா பின்லேனிடம் நெருங்கிய தொடர்பிலிருந்த அய்மான் அல்-ஜவாரி கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President says Al Qaeda leader was killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->