10,000 சிலைகள்! உலகின் மிகப்பெரிய இந்துமத கோயில்! சோழர்களின் பிரம்மாண்டத்திற்கு பின் இதுதான்...!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் உருவாக்கப்பட்டு உலகின் மிக பிரமாண்டமான இரண்டாவது இந்துமத கோயில் வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது.

யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட கம்போடியா நாட்டில் சோழ மன்னர்களால் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பிரண்டமாக கட்டப்பட்டது 'அங்கோர் வாட்' திருக்கோவில். உலகில் இருக்கும் இந்துமத கோயில்களில் இதுவே மிகப்பெரிய கோயில்.

இந்த கோவிலுக்கு அடுத்தபடியாக தற்போது அமரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் 'சுவாமிநாரயன் அக்ஷர்தாம்' திருக்கோவில் தான் இரண்டாவது மிக பெரிய இந்து கோவிலாகும். 

இந்த கோயில் பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மூலவர் விக்கிரகம் உட்பட இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. 

இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் விதமாக மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) இக்கோயில் கொண்டுள்ளது. 

இக்கோயிலின் கட்டுமானத்திற்கு சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இக்கோவிலில் 'பிரம்ம குண்ட்' என அழைக்கப்படும் இந்திய படிக்கிணறு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் உலகின் 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. 

சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது. 

இத்திருக்கோவில்  கட்டுமான பணியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வரும் அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். 


ஏற்கெனவே இந்த "போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா" அமைப்பினால் டெல்லியில் 100 ஏக்கரில் ஒரு பிரமாண்ட திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US New Jersey Times Square Hindu Temple BAPS Akshardham


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->