உக்ரைன் போர் 2023ல் முடிவுக்கு வரும் - ஐநா பொதுச் செயலாளர் நம்பிக்கை - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகிறது.

மேலும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை, உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் உக்ரைன் போர் 2023ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற வருடாந்திர ஆண்டு இறுதி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர், உக்ரைனில் உடனடியாக எதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை வாய்ப்பை தான் காணவில்லை என்றும், ஏற்கனவே அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மிகவும் அழிவுகரமான மோதலை நிறுத்துவதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் இது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN Secretary General Hopes Ukraine War Will End By 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->