உக்ரைனின் ஸபோரிஷியா அணுமின் நிலையம் மூடல்.! கதிர்வீச்சு வெளியாகும் அபாயம்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஸியா அணுமின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

மேலும் ஸபோரிஸியா சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த தாக்குதலால் அணுமின் நிலையத்தில் 5 உலைகளின் செயல்பாடு நிறுத்தப்பட்ட நிலையில், 6வது உலை மட்டும் அனுமின் நிலையத்தின் மின்சார விநியோகத்திற்காக செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த ஐ.ஏ.இ.ஏ குழுவினர் கதிர்வீச்சு அபாயத்தை தடுப்பதற்கு அப்பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அணுமின் நிலையத்தில், அணு உலைகளைக் குளிா்விப்பதற்குத் தேவையான மின்சாரம் வெளியிலுருந்து கிடைக்கப் பெற்றதையடுத்து 6வது உலையின் செல்பாட்டை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

மேலும் ஸபோரிஷியா பகுதியைச் சுற்றி தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதால், கதிர்வீச்சு வெளியாகும் அபாயத்தை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine Zaporizhia Nuclear Power Plant Shutdown due to radiation risk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->