நேட்டோவில் இணையப் போவதில்லை! உக்ரைன் அதிபர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள கோரும் முடிவை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அளித்த பேட்டியில், உக்ரைனுடன் ஒன்றிணைந்த பகுதிகளான டோனஸ்க் மற்றும் லூகாண்ஸ்க் ஆகிய பகுதிகளில் தன்னாட்சி பெற்றதாக ரஷ்யா அறிவித்திருப்பது தொடர்பாக ரஷ்யா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் நேட்டோ நாடுகள் அதன் கூட்டமைப்பிற்குள் தங்களை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்றும், அவர்களிடம் தானம் பெறும் ஒரு நாட்டின் தலைவராக தான் இருக்க விரும்பவில்லை என்றும் செலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என்றும் ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் டோனஸ்க் மற்றும் லூகன்ஸ்க் பகுதிகளை தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்றும், உக்ரைனின் ஒன்றிணைந்த பகுதியாக இருக்கும் மக்கள் தனி நாடு என்று அறிவித்து எப்படி வாழ முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine will not join nato


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->