உக்ரைன் தனது பிரதேசங்களில் இருந்து விலகாது... அது அரசியலமைப்பிற்கு முரணானது...! - ஜெலன்ஸ்கி
Ukraine will not give up its territories it is unconstitutional Zelensky
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நீடித்து வருகிறது.இந்நிலையில் இந்த நீண்ட கால போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

இதன் காரணமாக வருகிற 15-ந்தேதி டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த அமைதி ஒப்பந்தத்தின் கீழ், சில நிலங்களை உக்ரைன் விட்டுகொடுக்க வேண்டியதிருக்கும். மேலும், இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு உக்ரைன் அதிபர் ''ஜெலன்ஸ்கி'' எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இதுபற்றி ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது,"போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30 %-ல் இருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் விரும்புகிறார்.
மேலும் கண்டிப்பாக உக்ரைன் தனது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது, எதிர்கால ரஷ்ய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது உலக மக்களிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது.
English Summary
Ukraine will not give up its territories it is unconstitutional Zelensky