ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்து விநியோகத்திற்கு தடை.! உக்ரைன் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் மனித உரிமைகள் மீறல்கள் நடந்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷ்ய படைகள் தடுப்பதாக, உக்ரைனின் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து 6 மாதமாக நடந்து வரும் போரில், ரஷ்யா சரியான மனிதாபிமான வழித்தடங்களை அனுமதிக்கவில்லை. அந்த வழித்தடங்கள் மூலம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எங்களால் மருந்துகளை வழங்கியிருக்க முடியும்.

மேலும் அவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என்றும், அவை ஆவணப்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine says Russia blocks medition distribution in Russian occupied areas


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->