உக்ரைன் போர்: ரஷிய ராணுவத்தில் பலியான 2 இந்தியர்களின் உடல்கள் தாயகம் திரும்பின!
Ukraine Russia War indian people
உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுப் பணியாற்றிய ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் கோதர் (22) மற்றும் உத்தரகண்டின் ராகேஷ் குமார் (30) ஆகியோரின் உடல்கள் கடந்த புதன்கிழமை இந்தியா வந்தடைந்தன.
போலி வாக்குறுதி - கட்டாயப் பணி:
ஓராண்டிற்கு முன்பு மாணவர் விசாவில் ரஷியா சென்ற இவர்களுக்கு, போலி வேலைவாய்ப்பு வாக்குறுதி அளிக்கப்பட்டு ரஷிய ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். முறையான பயிற்சியின்றிப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட இவர்கள், சண்டையின் போது உயிரிழந்தனர்.
மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்:
வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேற்று மாநிலங்களவையில் அளித்த பதிலில்:
ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
7 பேர் அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போயுள்ளனர் (செப்டம்பர் முதல் மட்டும் 59 பேர் குறித்த தகவல் இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன).
English Summary
Ukraine Russia War indian people