'போரின் விளைவுதான்' உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து - அதிபர் ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரிவில் மழலையர் பள்ளி அருகே நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி துணை உள்துறை அமைச்சர் மற்றும் ஒரு மாநில செயலாளர் உட்பட 18 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குழந்தைகள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலிக்காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்பொழுது ஹெலிகாப்டர் விபத்து குறித்து பேசிய அவர், விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், போர் காலத்தில் நடந்தது விபத்து இல்லை. இந்த துயரம் போரின் விளைவுதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine President Zelensky says Helicopter crash a consequence of war


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->