ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் அண்டை நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பிலும் மோதல் அதிகரித்து உள்ளதால் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்ய நடத்திவரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை, உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ளனர். ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷிய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனை தொடர்ந்து அண்டை நாடுகளான மால்டோவா மற்றும் ஜார்ஜியா நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இணைய விண்ணப்பித்துள்ளது. இதனால், ரஷ்யா அதிர்ச்சியில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine nearby countries join NATO


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->