ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் பலி - உக்ரைன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரையினுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நவீன ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் படைகள் ரஷ்ய தாக்குதலை சமாளித்து முன்னேறி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாக்முட் நகரப் பகுதியில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் என அழைக்கப்படும் சோலேடார் இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் ரஷ்ய வீரர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 710 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,12,470 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine announced 710 Russian soldiers in one day


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->