திடீரென்று முடங்கிய ட்விட்டர் நிறுவனம்.! ட்வீட் செய்ய முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தார். இது பயனாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று டுவிட்டர் தளம் உலகம் முழுவதும் திடீரென முடங்கியுள்ளது. இதனால், பயனாளர்கள் ட்விட்டரில் டுவிட் செய்ய முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒரு பயனாளர் டுவிட்டரில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 400 டுவிட் செய்ய முடியும். இருப்பினும், பயனாளர்கள் செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

பயனாளர்கள், செல்போன் மூலம் டுவிட் செய்தால், உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து டுவிட்டரில் பிழை வந்துள்ளது. அதே சமயம் கணினி மூலம் டுவிட் செய்தால், தினசரி டுவிட் வரம்பை நீங்கள் தாண்டிவிட்டீர்கள் என்று பிழை வந்துள்ளது. 

இதனால், பயனாளர்கள் டுவிட் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்கான பணியில் டுவிட்டர் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது நிலைமை ஓரளவிற்கு சீரடைந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter network shut down in world wide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->