ட்விட்டரைத் தொடர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராம் பயனர்களின் கணக்குகள் திடீர் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


தற்போது, பிரபல சமூக வலைதலங்களான டுவிட்டர் பயனர்கள் தங்களால் புதிய டுவீட்களை பதிவிட முடியவில்லை என்றும், அவ்வாறு பதிவிட்டால் "நீங்கள் டுவீட் அனுப்புவதற்கான தினசரி வரம்பைத் தாண்டிவிட்டீர்கள்" என்ற பிழைச் செய்தியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து, டுவிட்டரின் குழு, இந்தச் சிக்கலை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்ததாவது,

 "உங்களில் சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். இந்த சிக்கலுக்கு மன்னிக்கவும். இதை சரிசெய்வதற்கு நாங்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களின் சேவைகளும் உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டுள்ளது. உலகளவில் பேஸ்புக்கில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்களின் கணக்குகளும், இன்ஸ்டாகிராமில் 7 ஆயிரம் பயனர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter facebook instagram users accouts shut down


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->