ஒரே அறிவிப்பில் ஒன்பது பேரை தூக்கிய எலான் மஸ்க்.!    - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சுமார் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று எலான் மஸ்க் டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்காக மாதந்தோறும் ரூ. 1600 வசூல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவையும் அதிரடியாக நீக்கியுள்ளார். அந்தக் குழுவில் உள்ள ஒன்பது பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் மட்டுமே இருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twitter Board of Directors group dismiss elon musk order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->