கருங்கடலில் 12 பேருடன் மாயமான துருக்கி கப்பல்: மீட்பு நடவடிக்கை ஒத்திவைப்பு!
Turkish ship 12 people Mysterious in Black Sea
துருக்கியில் புயலுக்கு மத்தியில் கருங்கடல் கடற்கரையில் 12 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த துருக்கியின் சரக்கு கப்பல் மாயமானது.
இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வட மேற்கு துருக்கியில் சோங்குல்டாக் மாகாணத்தில் கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததாக கப்பலின் கேப்டன் தெரிவித்ததாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த புயல் ஏற்பட்டதாகவும் மோசமான வானிலை காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வானிலை சற்று தெளிவான பின்னர் மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும். அதற்கான குழுக்களும் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Turkish ship 12 people Mysterious in Black Sea