ஐரோப்பிய நாடுகள் மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி; டிரம்ப் அறிவிப்பு..!
Trump announces 30 Percentage tariff on goods imported from European countries and Mexico
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 01 முதல் மெக்சிகோ, 30% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அத்துடன், வங்கதேசம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. குறித்த வரி விதிப்பு அடுத்த மாதம் 01-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. தொடர்ந்து, பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதித்தும், டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிரேசில், அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 08 நாடுகளுக்கு, புதிய வரி விதிப்பு குறித்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன், ஆகஸ்ட் 01-ஆம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump announces 30 Percentage tariff on goods imported from European countries and Mexico