தென்கொரியாவில் பயங்கரம்! வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


தென்கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள வாகன உதிரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 59 பேர் காயமடைந்துள்ள நிலையில், நான்கு தொழிலாளர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1:18 மணியளவில் பலத்த வெடிப்புச் சத்தத்துடன் தீ பரவியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த தீயைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, தொழிற்சாலை கட்டிடம் பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆளில்லா தீயணைப்பு ரோபோக்கள் மூலம் குளிர்விப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தேடுதல் பணிகள் தொடங்கின.

தற்போது தீயணைப்பு வீரர்கள் தீ மற்ற கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுப்பதிலும், ரசாயனங்களை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy South Korea 11 Dead Fire Auto Parts Factory


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->