கோவில்பட்டியில் அதிரடி வேட்டை...! 1.5 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய ரொக்கப் பணம்...! - தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி...!
Action hunting Kovilpatti Cash seized 1point5 kg ganja Special police officers action
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையை ஒடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை காவலர்கள் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அவர் கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்த முருகேசன் (43) என்பது தெரியவந்தது. மேலும், சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமானது.
இதையடுத்து, அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.21 ஆயிரம் ரொக்கப் பணத்தை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீஹா வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Action hunting Kovilpatti Cash seized 1point5 kg ganja Special police officers action