தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்த தகவலை தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.4 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், இந்த நிலநடுக்கமானது நேபாளத்தில் இருந்து கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today earth quake in nepal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->