#BREAKING : துருக்கியில் இன்று மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்.. 4300 தாண்டிய பலி எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


துருக்கி-சிரியா எல்லையில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியெண்டெட் மாகாணம் நுர்தாகி நகரில் அதிகாலை 4:17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று மாலை 3:54 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக மீண்டும் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் 3000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய துருக்கியில் மீண்டும் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரே நாளில் துருக்கியில் மட்டும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 8.43 மணிக்கு 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியது. அதனைத் தொடர்ந்து காலை 9.46 நுராக் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4300க்கு மேல் தாண்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today again earthquake continue in turkey


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->